ADDED : மே 23, 2010 02:19 AM
காரைக்குடி: பள்ளி, கல்லூரி என்.
சி.சி., மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியில் நடந்தது.சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 10 நாட்கள் பயிற்சி பெறுகின்றனர்.
துப்பாக்கி சுடுதல், மேப் ரீடிங், தடை தாண்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். கர்னல் நஞ்சப்பா தலைமையில், இணை முகாம் அதிகாரி குருசாமி, மேற்பார்வையாளர் ஜெயக்குமார், சுபேதார் சத்தியன், கம்பெனி அவில்தார் மேஜர் ஜெயபால், குழு பொறுப்பாளர் சிவக்குமார் பயிற்சி அளிக்கின்றனர்.